சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. – குறள்: 31
– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்
கலைஞர் உரை
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மறுமையில் விண்ணுலக இன்பத்தையும், வீடுபேற்றையுந் தரும் இம்மையிற் செல்வத்தையுந்தரும்; ஆதலால் மக்களுயிர்க்கு அறத்தைவிடச் சிறந்த ஆக்கம் எதுதான்?
மு. வரதராசனார் உரை
அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
G.U. Pope’s Translation
It yields distinction, yields prosperity: what gain
Greater than virtue can a living man obtain?
– Thirukkural: 31, Assertion of the strength of virtue, Virtues
Be the first to comment