சிறுபடையான் செல்இடம் சேரின் – குறள்: 498

Thiruvalluvar

சிறுபடையான் செல்இடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
– குறள்: 498

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சிறுபடையான் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின் ; அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படையரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினையொழிந்து திரும்புவான் .



மு. வரதராசனார் உரை

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.



G.U. Pope’s Translation

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.

 – Thirukkural: 498, Knowing the Place, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.