சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல். – குறள்: 934
– அதிகாரம்: சூது, பால்: பொருள்.
கலைஞர் உரை
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்
ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை.
மு. வரதராசனார் உரை
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
G.U. Pope’s Translation
Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down.
– Thirukkural: 934, Gambling, Wealth.