சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல – குறள்: 173

Thiruvalluvar

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றுஇன்பம் வேண்டு பவர்.
– குறள்: 174

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார், அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.



மு. வரதராசனார் உரை

அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.



G.U. Pope’s Translation

No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.

 – Thirukkural: 173, Not Coveting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.