குருவிரொட்டி இணைய இதழ்

சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் – குறள்: 647


சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
– குறள்: 647

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் சொல்லக் கருதியவற்றைப் பிறர்க்கேற்பச் சொல்லுதல் வல்லவனாய்; அவை மிகப்பலவாயினும் எதையும் மறந்து விட்டு விடாதவனாய்; அவைக்கு அஞ்சாதவனாயிருப்பவனை; தருக்கத்திலும் மாறுபாட்டிலும் வெல்லுதல் எவருக்கும் அரியதாம்.



மு. வரதராசனார் உரை

தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.



G.U. Pope’s Translation

Mighty in word, of unforgetful mind, of fearless speech. ‘Tis hard for hostile power such man to overreach.

 – Thirukkural: 647, Power of Speech, Wealth