சொல்லப் பயன்படுவர் சான்றோர் – குறள்: 1078

Thiruvalluvar

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். – குறள்: 1078

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்டவளவிற் கொடுத்துதவுவர்; ஆனால், கீழ்மக்களோ; வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெறித்துப் பிழிந்தாற்போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்தித் கொடுப்பர்.



மு. வரதராசனார் உரை

அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.



G.U. Pope’s Translation

The good to those will profit yield fair words who use; The base, like sugar-cane, will profit those who bruise.

 – Thirukkural: 1078, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.