சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க – குறள்: 827

Thiruvalluvar

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
– குறள்: 827

– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்
வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வில்லின் வளைவாகிய வணக்கம் அதை ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தலால்; பகைவ ரிடத்துத் தோன்றும் பொய்யான பணிவுவணக்கம் தீமையன்றி நன்மை செய்தலைக் குறித்ததென்று கருதற்க.



மு. வரதராசனார் உரை

வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது..



G.U. Pope’s Translation

To pliant speech from hostile lips give thou no ear; ‘Tis pliant bow that shows the deadly peril near!

Thirukkural: 827, Unreal Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.