சொற்கோட்டம் இல்லது செப்பம் – குறள்: 119

Thiruvalluvar

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
– குறள்: 119

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம் ; அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டமின்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே .



மு. வரதராசனார் உரை

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.



G.U. Pope’s Translation

Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.

 – Thirukkural: 119, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.