சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27
– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.
மு. வரதராசனார் உரை
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
G.U. Pope’s Translation
Taste, light, touch, sound , and smell: who knows the way Of all the five, -the world submissive owns his sway.
– Thirukkural: 27, The Greatness of Ascetics, Virtues