குருவிரொட்டி இணைய இதழ்

தக்காங்கு நாடி தலைச்செல்லா – குறள்: 561

தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
– குறள்: 561

– அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள்

கலைஞர் உரை

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே நல்லரசனாவன்.

மு. வரதராசனார் உரை

ஒருவன் பிறனுக்கு அல்லது பிறருக்குச் செய்த தீங்கைத் தகுந்த முறையில் நடுநின்றாராய்ந்து; அவன் மேலும் அதைச் செய்யாதிருத்தற்கேற்ப அவனைத் தண்டிப்பவனே நல்லரசனாவன்.

G.U. Pope’s Translation

Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he.

 – Thirukkural: 561, Absence of Terrorism, Wealth