குருவிரொட்டி இணைய இதழ்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் – குறள்: 613


தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. – குறள்: 613

– அதிகாரம்: ஆள்வினையுடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எல்லார்க்கும் நன்றிசெய்தல் என்னும் பெருமிதம்; விடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம்.



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.



G.U. Pope’s Translation

In strenuous effort doth reside
The power of helping others; noble pride!

 – Thirukkural: 613, Manly Effort, Wealth