தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கி
புன்நலம் பாரிப்பார் தோள். – குறள்: 916
– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.
கலைஞர் உரை
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர்; ஆடல்,பாடல்,ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்துத் தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத் தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார்.
மு. வரதராசனார் உரை
அழகு முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான நிலையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
G.U. Pope’s Translation
From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would thier own true good maintain will turn away.
– Thirukkural: 916, Wanton Women, Wealth.