தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68
– அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம்
கலைஞர் உரை
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால்,
அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக
மகிழ்ச்சி தருவதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம்மினும் மிகுதியாக தம் மக்கள் கல்வியறிவுடையராயிருத்தல் பெற்றோராகிய தமக்கு மட்டுமன்றி இம்மண்ணுலகத்துள்ள மற்றெல்லா மக்கட்கும் இன்பம் தருவதாம்.
மு. வரதராசனார் உரை
தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
Be the first to comment