தன்குற்றம் நீக்கிப்பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு. – குறள்: 436
– அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக்காண வல்லனாயின்; அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது ? ஒன்று மில்லை.
மு. வரதராசனார் உரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?
G.U. Pope’s Translation
Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan the faults of other men.
– Thirukkural: 436, The Correction of Faults , Wealth