தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். – குறள்: 293
– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்
கலைஞர் உரை
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியவில்லையென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய் சொன்னானாயின், அதனையறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றம்சாட்டித் துன்புறுத்தும்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
G.U. Pope’s Translation
Speak not a word which false thy own heart knows,
Self-kindled fire within the false one’s spirit glows.
– Thirukkural: 293, Veracity, Virtues