குருவிரொட்டி இணைய இதழ்

தன்னைத்தான் காதலன் ஆயின் – குறள்: 209

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
தன்னைத்தான் காதலன் ஆயின்

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால்
– குறள்: 209

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.



மு. வரதராசனார் உரை

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.



G.U. Pope’s Translation

Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!

 – Thirukkural: 209, Dread of Evil Deed, Virtues

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link