குருவிரொட்டி இணைய இதழ்

தன்உயிர் தான்அறப் பெற்றானை – குறள்: 268


தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும். – குறள்: 268

– அதிகாரம்: தவம், பால்: அறம்



கலைஞர் உரை

“தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும்
கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னுயிரைத் தனக்கு முற்றுரிமையாகப் பெற்றவனை; அங்ஙனம் பெறாத மற்ற மக்களெல்லாம் கைகூப்பி வணங்குவர்.



மு. வரதராசனார் உரை

தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.



G.U. Pope’s Translation

Who gains himself in utter self-control,
Him worships every other living soul.

 – Thirukkural: 268, Penance, Virtues