தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோய்அளவு இன்றிப் படும். – குறள்: 947
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
ஒருவன் தன் உடல் கூற்றையும், அதற்கேற்ற உணவையும், அதை உண்ணும் காலத்தையும் அறியாது, தான் விரும்பிய உணவுகளையெல்லாம் விரும்பியபொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்றலுக்கு மேற்பட்டுப் பேரளவாக உண்பானாயின், அவனிடத்தில் பல்வகை நோய்களும் தோன்றி வளரும்.
Be the first to comment