குருவிரொட்டி இணைய இதழ்

தீஅளவு அன்றித் தெரியான்   – குறள்: 947

தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோய்அளவு இன்றிப் படும்.        – குறள்: 947

                                   – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

விளக்கம்:

ஒருவன் தன் உடல் கூற்றையும், அதற்கேற்ற உணவையும், அதை உண்ணும் காலத்தையும் அறியாது, தான் விரும்பிய உணவுகளையெல்லாம் விரும்பியபொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்றலுக்கு மேற்பட்டுப் பேரளவாக உண்பானாயின், அவனிடத்தில் பல்வகை நோய்களும் தோன்றி வளரும்.