தீப்பால தான்பிறர்கண் செய்யற்க – குறள்: 206

Thiruvalluvar

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.



மு. வரதராசனார் உரை

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யாமலிருக்கவேண்டும்.



G.U. Pope’s Translation

What ranks as evil spare to do, if thou would’st shun Affliction sore through ill to thee by others done.

 – Thirukkural: 206, Dread of Evil Deed, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.