தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. – குறள்: 129
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
கலைஞர் உரை
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவன் ஒருவனை நெருப்பினாற் சுட்ட புண் காட்சிப் பொருளாகிய உடம்பையே சுட்டதினால், அப்பொழுதேயோ அப்புண் ஆறின பின்போ உள்ளத்தில் ஆறிவிடும் ; ஆயின், நாவினாற் சுட்ட புண்ணோ, கருத்துப் பொருளாகிய உள்ளத்தைச் சுட்டதினால், ஒருகாலும் ஆறாது அதன் கண்ணே நிற்கும் .
மு. வரதராசனார் உரை
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
G.U. Pope’s Translation
In flesh by fire inflamed, nature may throughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth nevermore.
– Thirukkural: 129, The Possession of Self-restraint, Virtues
Be the first to comment