தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. – குறள்: 43
– அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம்
கலைஞர் உரை
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு உரியனவாம்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.
மு. வரதராசனார் உரை
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்
G.U. Pope’s Translation
The manes, God. Guest, Kindred, self, in due degree These Five to cherish well is chiefest charity.
– Thirukkural: 43, Domestic Life, Virtues
Be the first to comment