தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். – குறள்: 510
– அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்
கலைஞர் உரை
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும் ; ஒருவனை ஆராய்ந்து தெளிந்தபின் அவனைப்பற்றி ஐயுறுதலும் ஆகிய இவ்விரண்டும்; அவனுக்கு நீங்காத துன்பத்தை விளைக்கும்.
மு. வரதராசனார் உரை
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
G.U. Pope’s Translation
Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal.
– Thirukkural: 510, Selection and Confidence, Wealth