தேறற்க யாரையும் தேராது – குறள்: 509

Thiruvalluvar

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். – குறள்: 509

அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க
வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க.



மு. வரதராசனார் உரை

யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.



G.U. Pope’s Translation

Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.

 – Thirukkural: 509, Selection and Confidence, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.