தேறினும் தேறா விடினும் – குறள்: 876

Thiruvalluvar

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
குறள்: 876

– அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள்.



கலைஞர் உரை

பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லா
விட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்த விடத்து; இன்னொரு பகைவனைத் தெளிந்தானாயினும் ; அவனொடு சேராமலும் அவனைவிட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க.



மு. வரதராசனார் உரை

இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத் தெரியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.



G.U. Pope’s Translation

Whether you trust or not, in time of sore distress,
Questions of diff’rence or agreement cease to press.

Thirukkural: 876, Knowing the Quality of Hate, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.