குருவிரொட்டி இணைய இதழ்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் – குறள்: 249


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249

– அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்
கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

-உயிர்களிடத்து அருள் செய்யாதவன் செய்யும் அறத்தின் தன்மையை ஆராயின்; தெளிந்த அறிவில்லாதவன் மெய்ப்பொருள் உணர்ந்தாற்போலும்.



மு. வரதராசனார் உரை

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.



G.U. Pope’s Translation

When souls un wise true wisdom’s mystic vision see, The ‘graceless’ man may work true work of charity.

 – Thirukkural: 249, The Possession of Benevolence, Virtues