தேவர் அனையர் கயவர் – குறள்: 1073

Thiruvalluvar

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான். – குறள்: 1073

– அதிகாரம்: கயமை, பால்: பொருள்



கலைஞர் உரை

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்
விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கயவர் தேவரை யொத்தவர்; அவரும் தேவரைப்போல முழுவுரிமையுடையவராய்த் தாம் விரும்பியவற்றை யெல்லாம் செய்து முடித்தலால்.



மு. வரதராசனார் உரை

கயவரும் தேவரைப் போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.



G.U. Pope’s Translation

The base are as the gods; they too
Do ever what they list to do!

 – Thirukkural: 1073, Baseness, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.