குருவிரொட்டி இணைய இதழ்

திறன்அறிந்து சொல்லுக சொல்லை – குறள்: 644


திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல்.
குறள்: 644

– அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல்வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சொல்ல வேண்டியதைச் சொல்லும் பொழுது தம் நிலைமையும் கேட்போர் நிலைமையும் செய்தியின் நிலைமையும் அறிந்து அவற்றிற் கேற்பச் சொல்லுக; அங்ஙனஞ் சொல்வதினுஞ் சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.



மு. வரதராசனார் உரை

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.



G.U. Pope’s Translation

Speak words adapted well to various hearers’ state;
No higher virtue lives, no gain more surely great.

– Thirukkural: 644, Power of Speech, Wealth