திறன்அல்ல தன்பிறர் செய்யினும் – குறள்: 157

திறன்அல்ல தன்பிறர் செய்யினும்

திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.

– குறள்: 157

அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்கு செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.



மு. வரதராசனார் உரை

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.



G.U. Pope’s Translation

Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep!

 – Thirukkural: 157, The Possession of Patience, Forbearance, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.