தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க – குறள்: 491

Thiruvalluvar

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது. – குறள்: 4
91

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்,
முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க
வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகைவரை முற்றுகை செய்வதற்கேற்ற இடம் பெற்ற பின்னல்லது ; அவருக்கு மாறாக எவ்வினையையுந் தொடங்காதிருக்க ; அவரைச் சிறியரென்று இகழாதிருக்க . .



மு. வரதராசனார் உரை

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.



G.U. Pope’s Translation

Begin no work of war, despise no foe,
Till place where you can wholly circumvent you know.

 – Thirukkural: 491, Knowing the Place, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.