தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. – குறள்: 1043
– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வறுமையென்று சொல்லப்படும் ஆசை; தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் தன்னைக் கொண்டவனுடைய பழைமையான குடிப்பண்பையும் அக்குடிப்புகழையும் ஒருங்கே கெடுக்கும்.
மு. வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.
G.U. Pope’s Translation
Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.
– Thirukkural: 1043, Poverty, Wealth
Be the first to comment