தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. – குறள்: 396
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கலைஞர் உரை
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போல, தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும்.
மு. வரதராசனார் உரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
Plz make a katturai on this topic
உங்கள் கருத்துக்கு நன்றி! இது குறித்து எங்கள் குழு ஆலோசிக்கும்.