தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828
– அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள்
கலைஞர் உரை
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே
கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல்படைக்கலம் மறைந்திருக்கும்; அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும்.
மு. வரதராசனார் உரை
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
G.U. Pope’s Translation
In hands that worship weapon often hidden lies; Such are the tears that fall from foeman’s eyes.
– Thirukkural: 828, Unreal Friendship, Wealth
Be the first to comment