குருவிரொட்டி இணைய இதழ்

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே – குறள்: 557


துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு.
– குறள்: 557

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத
அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ ; அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும்.



மு. வரதராசனார் உரை

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.



G.U. Pope’s Translation

As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

 – Thirukkural: 557, The Cruel Sceptre, Wealth