துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் – குறள்: 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல வர்க்கு.
– குறள்: 94

– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்



கலைஞர் உரை

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு
‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

யாரிடத்தும் இன்புறுத்தும் இன்சொல்லைச் சொல்வார்க்கு; துன்புறுத்தும் வறுமை இலதாகும்.



மு. வரதராசனார் உரை

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.



G.U. Pope’s Translation

The men of pleasant speech that gladness-breathe around, Through indigence shall never sorrow’s prey be found.

 – Thirukkural: 94, The Utterance of Pleasant Words, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.