குருவிரொட்டி இணைய இதழ்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் – குறள்: 926


துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.
குறள்: 926

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு
கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உறங்குபவர் உயிருடையரேனும் அறிவும் மனவுணர்வும் அந்நிலையிலின்மையால் இறந்தவரை யொப்பர்;அதுபோல் , கள்ளுண்பவர் இறவாதிருப்பினும் அறிவையும் உடல் நலத்தையும் என்றுமிழத்தலால் நாள்தோறும் நஞ்சுண்பவரை யொப்பர்.



மு. வரதராசனார் உரை

உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.



G.U. Pope’s Translation

Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they position quaff, we deem.

Thirukkural: 926, Not Drinking Palm – Wine, Wealth.