துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்: 188
– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்
கலைஞர் உரை
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற
குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; அயலார் செய்தியில் எத்தகையவராவார்.
மு. வரதராசனார் உரை
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
G.U. Pope’s Translation
Whose nature bids them faults of closest friends proclaim, What mercy will they show to other men’s good name?
– Thirukkural: 188, Not Backbiting, Virtues
Be the first to comment