துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். – குறள்: 263
– அதிகாரம்: தவம், பால்: அறம்
கலைஞர் உரை
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்!
மு. வரதராசனார் உரை
துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்!
G.U. Pope’s Translation
Have other men forgotten ‘penitence, ‘who strive
To earn for penitents the things by which they live?
– Thirukkural: 263, Penance, Virtues
Be the first to comment