உடையர் எனப்படுவது ஊக்கம் – குறள்: 591

உடையர் எனப்படுவது ஊக்கம்

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று        –  குறள்: 591

             – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் 

கலைஞர் உரை

ஊக்கம்  உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லக் காரணியமாயிருப்பது முயற்சியுள்ளம்; அம்முயற்சியுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ? ஆகார்.

மு.வரதராசனார் உரை

ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.