குருவிரொட்டி இணைய இதழ்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் – குறள்: 395


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். – குறள்: 395

– அதிகாரம்: கல்வி , பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும்
கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வர்முன் வறியர்போல் தாமும் ஆசிரியன்முன் ஆசையால் தாழ்ந்துநின்று கல்விகற்றவரே தலையானவ ராவர்; அங்ஙனந் தாழ்ந்து நிற்றற்கு நாணிக் கல்லாது விட்டவர் என்றுங் கடைப்பட்டவரே..



மு. வரதராசனார் உரை

செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.



G.U. Pope’s Translation

With soul submiss they stand, as paupers front a rich man’s face; Yet learned men are first; th’ unlearned stand in lowest place.

 – Thirukkural: 395, Learning, Wealth