குருவிரொட்டி இணைய இதழ்

உலகம் தழீஇயது ஒட்பம் – குறள்: 425



உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. – குறள்: 425

– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால், அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; அந்நட்பொழுக்கத்தில், வளர்தலும் தளர்தலுமின்றி, ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம்.



மு. வரதராசனார் உரை

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும், பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.