உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். – குறள்: 850
– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக்
கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உயர்ந்தோ ரெல்லாரும் உண்டென்று சொல்லும் பொருளை இல்லையென்று மறுக்கும் புல்லறிவாளன் மண்ணுலகத்தில் மாந்தன் வடிவில் வாழும் பேயாகக் கருதப்படுவான்.
மு. வரதராசனார் உரை
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
G.U. Pope’s Translation
Who what the world affirms as false proclaim, O’er all the earth receive a demon’s name.
– Thirukkural: 850, Ignorance, Wealth.