குருவிரொட்டி இணைய இதழ்

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் – குறள்: 762


உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்து
தொல்படைக்கு அல்லால் அரிது.
– குறள்: 762

– அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள்



கலைஞர் உரை

போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித
இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நீண்ட நேரம் பொருது களைத்த விடத்தும், தோல்வி நேர்ந்தால் மேல் நேரக்கூடியவற்றிற்கெல்லாம் அஞ்சாது நின்று பொரும் கடுமறம்; அரசர்க்கு வழி வழியாகத் தொடர்ந்து வரும் நிலைப்படைக்கு அல்லாமல் வேறுவகைப் படைக்கு உண்டாகாது.



மு. வரதராசனார் உரை

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.



G.U. Pope’s Translation

In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.

 – Thirukkural: 762, The Excellence of an Army, Wealth