குருவிரொட்டி இணைய இதழ்

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் – குறள்: 730


உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சி
கற்ற செலச்சொல்லா தார்.
– குறள்: 730

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர்.



மு. வரதராசனார் உரை

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.



G.U. Pope’s Translation

Who what they’ve learned, in penetrating words know not to say,
The council fearing, though they live, as dead are they.

 – Thirukkural: 730, Not to dread the Council, Wealth