உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். – குறள்: 309
– அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஒருவன் உள்ளத்தால் சினம் கொள்ளாதவனாக இருந்தால், எண்ணியவற்றையெல்லாம் அவன் உடனடியாகப் பெறுவான்.
மு. வரதராசனார் உரை
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.