உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. குறள்: 596
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
கலைஞர் உரை
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சி பற்றிய கருத்ததாகவே யிருக்க, பின்பு அவ்வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே.
மு. வரதராசனார் உரை
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
Be the first to comment