குருவிரொட்டி இணைய இதழ்

உணர்வது உடையார்முன் சொல்லல் – குறள்: 718


உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று. – குறள்: 718

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை உணரவல்ல அறிவுடையார் அவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல், தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும்



மு. வரதராசனார் உரை

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain!

– Thirukkural: 718, Knowledge of the Council Chamber, Wealth