குருவிரொட்டி இணைய இதழ்

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி – குறள்: 680


உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சி குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
– குறள்: 680

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன்
இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சிறிய ஆள்நிலத்தை யுடைய அமைச்சர்;வலிய பகைவர் வந்து தம்மைத்தாக்கிய விடத்துத் தம் நாட்டிலுள்ள குடிகள் நடுங்குவது கண்டுஅஞ்சி; பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்க்குமாயின்; அவ்வலிய பகைவர்க்குத் தாழ்ந்து அவர் கூறுங் கட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வர்.



மு. வரதராசனார் உரை

வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.



G.U. Pope’s Translation

The men of lesser realm, fearing the people’s inward dread,
Accepting granted terms, to mightier ruler bow the head.

 – Thirukkural: 680, The Method of Acting, Wealth