குருவிரொட்டி இணைய இதழ்

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் – குறள்: 812


உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
– குறள்: 812

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்
பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தமக்கொரு பயனுள்ள விடத்து நட்புச்செய்து அஃதில்லாத விடத்து நீங்கிவிடும்; உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பை; பெற்றாலும் பெற்றபின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடுண்டு ? ஒன்றுமில்லை.



மு. வரதராசனார் உரை

தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?



G.U. Pope’s Translation

What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?

Thirukkural: 812, Evil Friendship, Wealth