உறுபொருளும் உல்கு பொருளும்தன் – குறள்: 756

Thiruvalluvar

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
– குறள்: 756

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்
கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த பொருளும்; நிலவாணிகத்தில் வண்டிகளிலும் நீர்வாணிகத்தில் மரக்கலங்களிலும் வரும் பண்டங்கட்கு வாங்கும் ஆயமும்; தம் பகைவரைப் போரில் வென்றபின் அவரிடம் தண்டமாகவும் திறையாகவும் வாங்கும் பொருளும்; அரசிறையல்லாத பிறவழிகளில் அரசன் பெறும் பொருள்களாம்.



மு. வரதராசனார் உரை

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.



G.U. Pope’s Translation

Wealth that falls to him as heir, wealth from the kingdom’s dues, The spoils of slaughtered foes: these are the royal revenues.

 – Thirukkural: 756, Way of Accumulating Wealth, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.